எங்களை அழைக்க :

எங்களை பற்றி


முகப்பு / எங்களை பற்றி

எங்களை பற்றி


1) அறஞ்செய விரும்பு (அறம் – தருமம்) தருமம் செய்ய நீ விரும்புவாயாக!! 2) ஆறுவது சினம் (சினம் -கோபம்; ஆறுவது- தணிவது) கோபம் தணிந்து விடக்கூடிய தன்மையுடையது!! 3) இயல்வது கரவேல் (இயல்வது- இயன்ற; கரவேல்-தருமத்தை செய்யாமல் இரூத்தல் கூடாது) செய்வதற்கு இயன்ற தருமத்தை செய்யாமல் இருத்தல் கூடாது!! 4) ஈவது விலக்கேல் (ஈவது- கொடுப்பதை; விலக்கேல்-தடுக்காதே) ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பதைத் தடுக்காதே !! 5) உடையது விளம்பேல் (உடையது- உன்னிடம் உள்ளதை; விளம்பேல்- கூறாதே) உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளை பலரும் அறியும்படி கூறாதே ( பெருமையாக பேசாதே) !! 6) ஊக்கமது கைவிடேல் (ஊக்கமது – உள்ளக் கிளர்ச்சியை; கைவிடேல் – தளர்ந்து போக விடாதே) ஒரு காரியத்தை செய்தக்கண் உண்டாகிய உள்ளக் கிளர்ச்சியை தளர்ந்து போக விடாதே!! 7) எண்ணெழுத் திகழேல் (எண் – கணிதம்; எழுத்து- இலக்கண நூல்; இகழேல் – இகழ்ந்து ஓதுக்கி விடாதே) கணித நூல் ,இலக்கண நூல் முதலியவைகளை இகழ்ந்து ஓதுக்கி விடாமல் கற்க வேண்டும். 8) ஏற்பது இகழ்ச்சி (ஏற்பது – பிறரிடம் சென்று யாசித்தல்; இகழ்ச்சி – இழிவு தரும்) பிறரிடம் சென்று யாசித்தல் இழிவு தரும். 9) ஐயமிட்டு உண் (ஐயமிட்டு – கேட்பவற்கு கொடுத்து) கேட்பவற்கு கொடுத்து உண்ண வேண்டும் 10) ஒப்புர வொழுகு (ஒப்புர – உலக போக்கிற்கு எற்றவாறு; ஒழுகு – நட) உலக போக்கிற்கு எற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். 11) ஓதுவது ஒழியேல் ஓதுவது- கற்பது ஒழியேல்- நிறுத்தாதே நூல்களைக் கற்பதை நிறுத்தி விடாதே 12) ஓளவியம் பேசேல் ஓளவியம்-பொறாமை மொழி பொறாமை மொழிகளைப் பேசுதலை ஒழிப்பாயாக!! 13) அஃகஞ் சுருக்கேல் அஃகு – தானியம் சுருக்கேல்- சுருக்காதே நெல் முதலிய தானியங்களைக் குறைவாக விற்காதே!!

தங்கள் உலக மாற்ற. உன் மாற்ற. இந்த மாற்றங்கள் எல்லாம்.

தொடர்பு கொள்ளுங்கள்

,
, ,

செய்திமடல் இணைந்ததற்கு

உங்கள் செய்தி தேர்ந்தெடுக்கவும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், மற்றும் கிளிக் "குழுசேர்"


பதிப்புரிமை ©2015 அறக்கட்டளை
அனைத்து வலது பாதுகாக்கப்பட்டவை.