எங்களை அழைக்க : +41 77 947 58 83

மிகப்பிந்திய செய்திகள் தலைப்பு


முகப்பு / மிகப்பிந்திய செய்திகள் தலைப்பு

மிகப்பிந்திய செய்திகள் தலைப்பு


15 வீத வட் வரி அதிகரிப்பு! இன்று முதல் அமுலாகிறது!

05/02/16

15 வீத VAT வரி அதிகரிப்பு இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை வரி அறவிடப்படாத சில பொருட்களுக்கும் இம்முறை VAT வரி அறவிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மின்சார தொலைத்தொடர்புகள் சேவை, கையடக்க மற்றும் நிலையான தொலைபேசிகளுக்கான உபகரணங்கள், சுகாதார சேவை ஆகியன இந்த VAT வரித் திருத்தத்திற்குள் உள்ளடங்குகின்றன. இதுவரையில் தேசிய கட்டட நிர்மான வரிக்குள் அடங்காத பொருட்கள் மற்றும் சில சேவைகளுக்கும் இம்முறை 2 வீத தேசிய கட்டட நிர்மான வரி அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய VAT வரித் திருத்தங்களுடாக நாளாந்த வாழ்கையில் எதிர்நோக்க கூடிய சவால்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். மேலும் 21 அதிகமான அத்தியாவசியப் பொருட்களுக்கு , புதிய VAT வரித் திருத்தத்தினால் எவ்வித பாதிப்புக்களும் இல்லை என இராஜாங்க நிதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இன்று முதல் அமுல் படுத்தப்படும் VAT வரி அதிகரிப்பினூடாக பேக்கரி உற்பத்திகள் 05 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. புதிய இணைப்பு வட்வரி, கல்வி, மருத்துவப் பொருட்களுக்கு விதிக்கப்பட மாட்டாது- ரவி கருணாநாயக்க 11 வீதத்தில் இருந்து 15வீதமாக அதிகரிக்கப்பட்ட வட் வரி நாளை முதல் அமுலாகிறது. எனினும் இது கல்வி மற்றும் மருத்துவ பொருட்கள் விடயத்தில் அமுல்செய்யப்படமாட்டாதுஎன்று நிதியமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சர் ரவி கருணாநாயக்க தமது அமைச்சில் வைத்து இதனை தெரிவித்துள்ளார். எனினும் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் மருத்துவ சேவைகளுக்கு வட்வரிபொருந்தும். தொலைத்தொடர்பு சேவைகளுக்கும் வட்வரி பொருந்தும். இந்தநிலையில் வட்வரியின் மூலம் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுதவிர்த்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வட்வரி காரணமாக அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படமாட்டாது என்றும்அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் உலக மாற்ற. உன் மாற்ற. இந்த மாற்றங்கள் எல்லாம்.

தொடர்பு கொள்ளுங்கள்

Zurcherstrasse , 46
5210 ,Windisch ,Schweiz

aramswiss16@gmail.Com

+41 77 947 58 83

http://www.aramswiss.ch

செய்திமடல் இணைந்ததற்கு

உங்கள் செய்தி தேர்ந்தெடுக்கவும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், மற்றும் கிளிக் "குழுசேர்"


பதிப்புரிமை ©2015 அறக்கட்டளை
அனைத்து வலது பாதுகாக்கப்பட்டவை.