எங்களை அழைக்க :

மிகப்பிந்திய செய்திகள் தலைப்பு


முகப்பு / மிகப்பிந்திய செய்திகள் தலைப்பு

மிகப்பிந்திய செய்திகள் தலைப்பு


முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையில் ஆஜர்

04/29/16

முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். ஸ்ரீலங்கா விமான சேவை, கேடரின் சேவையில் இடம்பெற்றுள்ள அரச சொத்து துஸ்பிரயோகம் மற்றும் மோசடிகள் தொடர்பில் பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது. அந்த விசாரணைகளில் பங்கேற்குமாறு முன்னாள் அமைச்சருக்கு ஆணைக்குழு உத்தரவிட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்சவின் சகோதரரும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான நிசாந்த விக்ரமசிங்கவும் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார். மற்றுமொரு முன்னாள் தலைவர் சரத்சந்திர பெர்னாண்டோ, பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன. மனோஜ் வாஸ் குணவர்தன, முன்னாள் விமானப் பணிப் பெண் செனானி குமாரதுங்க ஆகியோருக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தங்கள் உலக மாற்ற. உன் மாற்ற. இந்த மாற்றங்கள் எல்லாம்.

தொடர்பு கொள்ளுங்கள்

,
, ,

செய்திமடல் இணைந்ததற்கு

உங்கள் செய்தி தேர்ந்தெடுக்கவும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், மற்றும் கிளிக் "குழுசேர்"


பதிப்புரிமை ©2015 அறக்கட்டளை
அனைத்து வலது பாதுகாக்கப்பட்டவை.