எங்களை அழைக்க : +41 77 947 58 83

மிகப்பிந்திய செய்திகள் தலைப்பு


முகப்பு / மிகப்பிந்திய செய்திகள் தலைப்பு

மிகப்பிந்திய செய்திகள் தலைப்பு


குராம் செய்க் கொலை வழக்கு! தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீடு ஒக்டோபரில் பரிசீலனை!

04/29/16

பிரிட்டன் பிரஜை குராம் செய்க் தங்காலையில் ஹோட்டல் ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்றம் விதித்திருந்த தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீடு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 6ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. குற்றவாளிகளுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தண்டனை போதுமானதல்ல எனத் தெரிவித்து சட்ட மா அதிபரும், பாதிக்கப்பட்டத் தரப்பினரும் மேன்முறையீடு செய்திருந்தனர். குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்காது, மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டுமெனக் கோரி சட்ட மா அதிபர் இந்த மேன்முறையீட்டை செய்துள்ளார். இதேவேளை தமக்கு வழங்கப்பட்ட 20 ஆண்டு சிறைத்தண்டனையை நீக்குமாறு கோரி தண்டனை விதிக்கப்பட்டவர்களும் மேன்முறையீடு செய்துள்ளனர். 2014ம் ஆண்டு கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் ரோஹினி வல்கம குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும் தலா 80000 ரூபா அபராதமும் விதித்திருந்தார். இந்த தண்டனை போதுமானதல்ல என சட்ட மா அதிபர் தரப்பும், குற்றமற்றவர்கள் தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி தண்டனை விதிக்கப்பட்டவர்களும் மேன்முறையீடு செய்திருந்தனர். இந்த மேன்முறையீடுகள் குறித்த மனுக்களை ஒக்ரோபர் மாதம் 6ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வது என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.

தங்கள் உலக மாற்ற. உன் மாற்ற. இந்த மாற்றங்கள் எல்லாம்.

தொடர்பு கொள்ளுங்கள்

Zurcherstrasse , 46
5210 ,Windisch ,Schweiz

aramswiss16@gmail.Com

+41 77 947 58 83

http://www.aramswiss.ch

செய்திமடல் இணைந்ததற்கு

உங்கள் செய்தி தேர்ந்தெடுக்கவும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், மற்றும் கிளிக் "குழுசேர்"


பதிப்புரிமை ©2015 அறக்கட்டளை
அனைத்து வலது பாதுகாக்கப்பட்டவை.