எங்களை அழைக்க : +41 77 947 58 83

மிகப்பிந்திய செய்திகள் தலைப்பு


முகப்பு / மிகப்பிந்திய செய்திகள் தலைப்பு

மிகப்பிந்திய செய்திகள் தலைப்பு


நிலையான தொலைபேசி பயன்பாட்டில் வீழ்ச்சி!

04/29/16

நிலையான தொலைபேசி பயன்பாட்டில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் நாட்டில் நிலையான தொலைபேசிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015ம் ஆண்டில் செல்லிடப் பேசி இணைப்புப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 10.2 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. இலங்கையில் 100 பேரிடம் 116.3 செல்லிடப் பேசிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிலையான தொலைபேசி இணைப்பு பெற்றுக்கொண்டவர்கள் 12.4 வீதமாகும்.நிலையான தொலைபேசிகளை விடவும் செல்லிடப் பேசிகளை பெற்றுக் கொள்வதில் மக்கள் அதிக நாட்டம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2015ம் ஆண்டில் 19.5 வீதமானவர்கள் இணைய இணைப்பினைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த இணைய இணைப்புக்களின் எண்ணிக்கை 20.5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. செல்லிட இணைய இணைப்புக்கள் 22.2 வீதத்தினாலும், நிலையான இணைய இணைப்புக்கள் 12.6 வீதத்தினாலும் உயர்வடைந்துள்ளன.

தங்கள் உலக மாற்ற. உன் மாற்ற. இந்த மாற்றங்கள் எல்லாம்.

தொடர்பு கொள்ளுங்கள்

Zurcherstrasse , 46
5210 ,Windisch ,Schweiz

aramswiss16@gmail.Com

+41 77 947 58 83

http://www.aramswiss.ch

செய்திமடல் இணைந்ததற்கு

உங்கள் செய்தி தேர்ந்தெடுக்கவும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், மற்றும் கிளிக் "குழுசேர்"


பதிப்புரிமை ©2015 அறக்கட்டளை
அனைத்து வலது பாதுகாக்கப்பட்டவை.